Thursday, February 28, 2008

நினைவலைகள் - சுஜாதா......
Sujatha......An era comes to an end......

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைக்கு காத்திருந்து விகடன் வந்தவுடன் பிறருக்கு தெரியாமல் அதை லவட்டி, பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகுமுன் சுஜாதா கதையை படித்தால்தான்( சில சமயம் அந்த 20 – 30 நிமிடங்களுக்குள் 2- 3 முறை படித்ததும் உண்டு) உயிர் இருக்கும் என்றிருந்த காலம் அது.

கணேஷ், வசந்த் தான் அன்றைய நேரத்து ஹீரோக்கள்!

அந்த கணங்களில் அந்த வார்த்தைகள் தந்த அந்த சுகம் என்றும் மறக்க முடியாது.

அவருக்கு 45- 50 வயதான நேரத்தில்தான் அவர் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். என்றாலும் என்ன ஒரு இளமை அவரது எழுத்தில்.

என்ன ஒரு வேகம். என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு குறும்பு. எல்லாவற்றிற்கும் மேலாக என்ன ஒரு freshness.

அதிகம் build-up இல்லாமல், ரொம்பவும் feel விடாமல் மிகவும் இயல்பாக, பேச்சு நடையில் இருந்த அந்த எழுத்துக்கள், தூய இலக்கணத் தமிழ் மட்டுமே என்று அடம் பிடிக்காத சுபாவம் - அன்றைய வாசகர்களை கவர்ந்ததில் எந்த ஒரு வியப்பும் இல்லை. இன்று வரை அதே effect இருப்பதிலும் ஆச்சர்யம் இல்லை.

அந்த படைப்புகள் அனைத்தும் எப்பொழுது எழுதப்பட்டிருந்தாலும், இப்பொழுதும் அதே உணர்வை தருவதுதான் சுஜாதாவின் தனிச்சிறப்பு.

விஞ்ஞானம் புரிய வேண்டுமானால் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற ஒரு நிலைமையை உடைத்தது அவரின் மற்றுமொரு பெரும் சிறப்பு.

விஷயம் தெரிந்தவர்கள், சொல்லும் விதத்தில் சொன்னால் சொல்லும் விஷயம் எதுவாக இருந்தாலும், எந்த மொழியில் இருந்தாலும் யாருக்கும் புரியும் என்று பலருக்கு முதலில் புரிய வைத்தது சுஜாதா.

தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் வாசித்திருக்க கூடிய மிக சில படைப்பாளர்களில் சுஜாதாவும் ஒருவர் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

சுஜாதாவின் அந்த ஒரு தனித்துவ எழுத்து நடைதான் இன்று நம்மில் பலரை effectively bi-lingual (proficiency in both Thamizh and English) ஆக ஆக்கியிருப்பதின் ஒரு முக்கிய காரணம் என்றுகூட நினைக்கத் தூண்டுகிறது.

நம்மை போல பல கோடியினரை பற்பல கணங்களில் கவலை எல்லாம் மறந்து சந்தோஷப் படுத்தியது சுஜாதாவின் படைப்புகள்.

அவர் மறைந்து விட்டாலும் நம்மையும், இன்னும் படிக்கபோகும் பல கோடியினரையும் அவர் விட்டுவிட்டு சென்றுள்ள எல்லா படைப்புகளும் - எத்தனை முறை திரும்பத்திரும்ப படித்தாலும் - ஒவ்வொரு முறையும் புதிதாக படிப்பது போன்ற உணர்வோடு

சந்தோஷப்படுத்தும்.....
மெய்சிலிர்க்க வைக்கும்.......
கண் கலங்க வைக்கும்.......
உத்வேகப்படுத்தும்......
ஊக்கப்படுத்தும்..........
என்பது மட்டும் சத்தியம். சாஸ்வதம்.

Wednesday, February 27, 2008

ஒரு சமகால சகாப்தம் மறைந்து விட்டது....

http://thatstamil.oneindia.in/news/2008/02/28/tn-writer-sujatha-passes-away.html

http://thatstamil.oneindia.in/news/2008/02/28/tn-vairamuthu-condoles-sujathas-death.html

எழுத்தாளர், பொறியியல் வல்லுநர், விஞ்ஞானி சுஜாதா S.Rengarajan (1935-2008) மறைந்து விட்டார்.

For most people like me, in my generation, he was the main reason we can claim to have read literary work in Tamil.

Personally, for someone who started off reading mostly English Fiction very young, his conceptualization skills and fresh writing style were the sole reasons that attracted me to read Tamil fiction and non-fiction.

அவரது எழுத்து திறன் அர்த்தமுள்ளது, புதுமையானது, நிலையானது.

அவரது படைப்புகளை படித்து, வசீகரிக்க படாதவர்கள் கண்டிப்பாக இருக்கவே முடியாது.

என் வயதுடைய தமிழர்களில் வெகு சிலரே சுஜாதாவின் எழுத்துக்களை சுவைத்திருக்க மாட்டார்கள், ஆற்றலை வியந்திருக்க மாட்டார்கள்.

Besides writing, he was truly multi-faceted.

A gifted Engineer - Election Commission of India owes a lot to him. He was the Chief of the Group at BEL that devised the EVM (Electronic Voting Machine)

எனக்கு தெரிந்து உலகில் சிலருக்கு மட்டுமே மாற்று (alternatives) கிடையாது, இருக்க முடியாது - அதில் சுஜாதாவும் ஒருவர்.

This is certainly a huge loss to Tamil and Tamil Nadu, in recent times.

It might take a generation or two to fill up the void.

May his Soul rest in peace.

May he be remembered and read by many many more generations to come....

SN