Thursday, November 20, 2014

திருக்குறள்

குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
 *****


கடவுளை அடி பணிபவர்களுக்கு மறுபிறவி இல்லை.
 *****

திருக்குறள்

குறள் 7

தனக்குவமை  இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
 *****
கடவுளை சரணடைந்தால் மனக்கவலை நீங்கும். 
 *****

திருக்குறள்

குறள் 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
 *****
இறைவனை வணங்குபவர்களை நல்லது
கெட்டது இரண்டும் பாதிக்காது.
  *****

திருக்குறள்

குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
 ******
கடவுளை வணங்குவோருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.
 ******

திருக்குறள்

குறள் 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

கடவுளின் திருவடிகளை வணங்குவோர்
இன்ப உலகில் நீடித்து வாழ்வார்.

திருக்குறள்

குறள் 2

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கல்வி கற்றதன் பயன் கடவுளை வணங்குவது.