BILLA 2....
" மத்தவங்க பயம்தான், நம்ம பலம்",
" தீவிரவாதிக்கும், போராளிக்கும் ஒரே வித்தியாசம் வெற்றி தான்.. கடைசில ஜெயிச்சுட்டா போராளி..இல்லன்னா தீவிரவாதி"
"எத்தனை எதிரிங்கள வேணும்னாலும் விட்டு வைக்கலாம் …. ஆனா ஒரு துரோகிய விடவே கூடாது...
" நாங்க அகதிங்க தான்..ஆனா அனாதைங்க இல்ல"
"எனக்கு நண்பனா இருக்க எந்த தகுதியும் வேண்டாம்.....எதிரியா இருக்க தகுதி வேணும்"
'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்...... ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும்....." (இதுக்கு மேல முடியல.... மூச்சு முட்டுதுடா சாமி.................)
இப்படி யார் யாருக்கோ மெசேஜ் சொல்லிச் சொல்லியே நமக்கு ஜன்னியக் கிளப்பும் ஹீரோ அஜித்.
கூடகுறுக்கும் மறுக்குமா நடக்க கோட் போட்ட ஆண்கள்...
டிரஸ் கொடுத்தா "அழுதிடுவோமுன்னு "சொல்லும் பெண்கள்....
பேசி முடிச்ச உடனே பக்கத்திலே யாரவது இருந்தா டுமீல்.....டுமீல்.....
இவர் சுட்டா பக்கத்திலே இருக்க கைத்தடி சும்மாவா இருப்பான்..... அவன் பங்குக்கு அவனும் டுமீல்....டுமீல்....
எங்கே சுட்டானுங்க......எதுக்காக சுட்டானுங்க......புரியிறதை விட நம்ம சுடாம விடணுமேன்னு ஒருஇனம் புரியாத பயம்....
டீ, காபியை விட துப்பாக்கி இவனுங்களுக்கு ஈசியா கிடைக்குது......
கார், பஸ், விமானம், ரயில், கப்பல், படகு, விதம் விதம்மா துப்பாக்கி .... சொந்தமா இவனுங்ககிட்டேஇல்லாதது மூளை மட்டும் தானோன்னு ஒரு பிரம்மை.
துப்பாக்கி வாகாக் கிடைக்கலேன்னா இருக்கவே இருக்கு கத்தி, கம்பி..... எதை எதையெல்லாம் வெச்சுஉயிர் எடுக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு பாடம்.
கழுத்தை அறுத்து எத்தனை கொலை, சுட்டு எத்தனை கொலை, கையால அடித்தே எத்தனை கொலைஅப்படின்னு தனித்தனியா ஒரு போட்டி வெச்சு ஜெயிச்சவங்களுக்கு ஆளுக்கு ஒரு பாட்டில் ரத்தம்கொடுக்கலாம்.
சில படங்கள் பார்த்துட்டு வெளியே வரும் போது ஒரு குழப்பம் வரும்...... வாய் கசக்கும்...... மனசுலவெறுப்பு தங்கும்..........படத்துல எல்லோரையும் சுடுற மாதிரி நம்மையும் சுட்டிருக்கக் கூடாதான்னு, நாமயாரையும் சுட்டுற மாட்டோமான்னு தோணும்,....படம் பார்க்க உள்ள போக நிக்கும் எல்லோரையும்பார்த்தா பாவமா இருக்கும்..... எதையாவது செஞ்சு, சொல்லி அவங்களை எல்லாம் காப்பாத்தீறமாட்டோமான்னு மனசு
அலை பாயும்..
சுருக்கமா சொன்னா மண்டைக்குள்ள ஏதோ குடையாய் குடையும்.........
பில்லா 2 பார்த்தா இதுவும், இதுக்கு மேலயும் கட்டாய கியாரண்டி.............
ஷார்ப்பா, brightஆ படம், முடிஞ்சா அளவுக்குக் குறைச்சலா துணியோட பெண்கள், அப்பப்போ வெளி நாடு,கொஞ்சம் ஆங்கிலம், புரியாத தமிழ், கோட் சூட், கறுப்புக் கண்ணாடி (இதெல்லாம் கேட்டா - ஸ்டைல் ??) தமிழே தெரியாத ஆட்கள் பாடி,பாட்டுங்கற பேர்ல இரைச்சல், ஊரு முழுக்க போஸ்டர், வேலையத்ததொலைகாட்சியிலே எல்லாம்
ஒரு முன்னோட்டம் (அதுல அவர் குடையை அவரே பிடிப்பாரு, அவருதண்ணிய அவரே குடிப்பாரு, மத்தவங்க ஒவ்வொரு ஆளுக்கும் சீன் வைக்க சொல்வாருன்னு “சும்மா இருக்க ஆளை சொரண்டி விடும் ” பில்ட் - அப்) இதெல்லாம் கலந்தது மட்டுமே தற்கால சினிமா.....
இப்போதெல்லாம் ஒருநல்ல, பார்க்க முடியும் படம் பார்க்கணும்னா சுமார் ஒரு 10-15 கர்மங்களை சகிச்சுக்க வேண்டியிருக்கு.
எழவு வேறு எந்தப் பொழுதுபோக்கும் - படிப்பதோ, சொல்லிக் கொடுப்பதோ, உடற்பயிற்சி செய்வதோ,தொண்டூழியம் செய்வதோ - இப்படி ஒண்ணுமே தெரியாம, அறியாம வளர்ந்து விட்ட நமக்கு தமிழ் சினிமாவைத் தவிர என்னதான் விமோசனம்.
அதற்காக எத்தனை நாளுக்குத்தான் இப்படி மனக் கஷ்டத்தோட அசிங்கப் படுறது.....
கொஞ்சம் யோசிச்சு பார்த்தா…. நம்ம குடும்பத்திலே இருக்கவங்க பிறந்த நாள் கூட தெரிஞ்சிக்க, ஞாபகம்வச்சுக்க முடியாம, தலைவர்கள் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணும் நம்மளப் போன்ற கேடுகெட்டவங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணுங்கற விஷயம் தெள்ளத் தெளிவாகும்.
ஒண்ணு நிச்சயம் - இது மாதிரி ஒரு 10-15படங்கள் தொடர்ந்து வந்தா நல்லதோன்னு
தோணுது.... ….
தமிழ்சினிமா அதுவாக மெல்லச் சாகும்ல !!!
காதில் விழுந்த கொசுறு கமெண்ட் - இதுக்கு ‘ஒஸ்தி’ எவ்வளவோ மேல்.....
No comments:
Post a Comment